Wednesday, December 26, 2018

பாலிதீன் பை

🙏🏼வணக்கம்🙏நண்பர்களே....
*ஒரு சிறு வேண்டுகோள்.*
*ஏற்பதும், மறுப்பதும் உங்கள் உரிமை...*

*2019 முதல் நாமும், நம் குடும்பத்தாரும், பாலிதீன் பைகளில் பொருள் வாங்குவதையும்.... பயன்படுத்துவதையும்... நிறுத்துவோம்*

நாம் பங்கேற்கும் ஒவ்வொரு WhatsApp  குழுவிலும் முகநூலிலும் இந்த வேண்டுதலை வைக்கலாமே?

*சிலரேனும் செவிமடுத்து மாற வாய்ப்புண்டு அல்லவா?*

உதவுங்கள் உறவுகளே!!
நாம் விட்டுச்செல்லும் உலகம் நஞ்சாகிவிடாமல் , வரும் சந்ததியும் வாழவேண்டுமல்லவா?

நமது இளமைக்காலம்,
எவ்வளவு இனிமையானது...
இயல்பானது.....
நமது முன்னோர்களை வாழ்த்தி வணங்குவோம்..

பாலிதீன் பைகளை ஒவ்வொரு தனி நபரும் எப்படியெல்லாம் தவிர்க்கலாம் என சிந்தித்து,  சிறு முயற்சியை துவங்குவோம்.

👉 *காய்கறி, மளிகை பொருள்கள், பழங்கள் வாங்க செல்லும் போது துணிப் பைகளை கொண்டு செல்லுங்கள்*

👉 *மீன் , இறைச்சி, டீ, காபி, பழச்சாறு, வாங்க செல்லும் போது ஒரு பாத்திரத்தை கொண்டு செல்லுங்கள்*

👉 *நீங்கள் வாகனத்தில் செல்லும் பொழுது ஒரு பொருளை வாங்க நேரிடலாம் அப்போ வேறு வழி இல்லாமல் பாலிதீன் பைகளில் பொருளை வாங்க நேரிடும் அதை தவிர்க்க எப்பொழுதுமே உங்கள் வாகனத்தில்  ஒரு துணிப் பையை வைத்து கொள்ளுங்கள்*

*நாட்டின் இயற்கை வளத்தை பாதுகாக்க ஒவ்வொரு தனி நபரும் முயற்சி செய்யுங்கள் உங்களில் இருந்து மாற்றத்தை கொண்டு வாருங்கள் உங்கள் குழந்தைகளுக்கும், உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவலை கொண்டு செல்லுங்கள்,*

*ஒரு நாளைக்கு ஒரு நபரிடமாவது இந்த நாட்டின் பசுமையை காத்திட விழிப்புணர்வு கொடுங்கள்*

வருங்கால சந்ததிகளை  நலவாழ்வு வாழ வழி செய்வோம்.
முதலில் நாம் மாறுவோம்....,  இனி துணிப்பையை கையில் எடுப்போம்.
இந்த பதிவை படித்து உறுதிஎடுத்து மற்றவருக்கும் எடுத்து  கூறிவோம். இதை நம் சார்பாக முன்னெடுக்க தன்னளவில் மாற முனைவோம்
       *நன்றி🙏*

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home